search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் வியாபாரி கைது"

    • 20 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்.
    • இந்த நிலையில் முருகேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரையை அடுத்த கோபாலபுரம் கிராமம் நடுவீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். பின்னர் அவர் பச்சையம்மாள் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    முருகேசனுக்கு முதல் மனைவி மூலம் ஒரு மகன், ஒரு மகளும், 2-வது மனைவி மூலம் 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் முருகேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    கடந்த வாரம் கோபாலபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள கருத்தராஜாபாளையத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. மறுநாள் காலை கருத்தராஜாபாளையத்தில் உள்ள மதுக்கடையில் இருந்து சுமார் ½ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலை அமைய உள்ள இடத்தின் அருகே முருகேசன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன், மல்லியகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசன், கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் முருகேசனுடன், இரவில் மது அருந்திய அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்பொழுது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது முருகேசன் இறந்து கிடந்த தகவலை முதலில் காவல் நிலையத்திற்கு சென்று கூறியது மல்லிகைகரைப் பகுதியைச் சேர்ந்த பூவரசன். பால் வியாபாரி என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் வெளியானது.

    முருகேசன் குடி போதையில் மல்லியகரை பகுதியில் சாலையில் படுத்திருந்தார். அப்போது அந்த வழியே பால் வியாபாரம் செய்ய வந்த பூவரசன் அவரை சாலையில் இருந்து ஓரமாக படுங்கள் எனக் கூறினார். இதனால் போதையில் முருகேசன் தகாத வார்த்தையால் திட்டி பூவரசனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பூவரசன் சரமாரியாக முருகேசனை தாக்கி கல்லால் தலையில் குத்திவிட்டு சென்றுவிட்டார்.

    மறுநாள் காலையில் வந்து பார்க்கும் பொழுது முருகேசன் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக மல்லி கரை போலீசில் ஒருவர் இறந்து கிடக்கிறார் என முதல் தகவலை கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் கொலை செய்துவிட்டு நாடகமாடியது கண்டுபிடிக்கபப்ட்டது. இதை தொடர்ந்து முருகேசன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • திண்டுக்கல் அருகே மாணவியை கடத்திச்சென்ற பால் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்
    • மாணவியை கடத்திய வியாபாரிக்கு சிறை

    வடமதுரை :

    திண்டுக்கல் மாவட்டம் கூத்தாம்பட்டியை சேர்ந்த அரசு ஊழியரின் 11 வயது மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டில் வளர்க்கும் மாடுகளை பராமரிக்கவும், பால் கறக்கவும் சிலுவத்தூர் காம்பார்பட்டியை சேர்ந்த குணசேகரன்(40) என்பவர் வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவியை குணசேகரன் கடத்திச–்சென்றுவிட்டார். பள்ளியில் சென்று விசாரித்த போது மாணவியின் புத்தகப்பை மட்டுமே இருந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். சந்தேகத்தின்பேரில் குணசேகரனின் செல்ேபான் எண்ணையும் போலீசார் டிரேஸ்அவுட் செய்து பார்த்தபோது அவர் மாணவியை கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்களை பிடித்து வந்த போலீசார் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    எதற்காக சிறுமியை கடத்திச்சென்றார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×